நியூசிலாந்து – இந்தியா மோதும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று நடக்கிறது…

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 09:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
நியூசிலாந்து – இந்தியா மோதும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று நடக்கிறது…

சுருக்கம்

New Zealand - Indias second training game takes place today ...

நியூசிலாந்து - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 22-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில்  நடக்கிறது. இதனையொட்டி நியூசிலாந்து அணி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

நியூசிலாந்து அணியின் வீரர்கள்:

கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளைன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் ஒர்க்கர்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியின் வீரர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, ஷிவம் சவுத்ரி, கருண்நாயர், குர்கீரத் மான், மிலின்ட்குமார், ரிஷாப் பான்ட், ஷபாஸ் நதீம், கரண்ஷர்மா, தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட், அவேஷ்கான்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Kieron Pollard: MI அணியின் புதிய ‘கிங்’ பொல்லார்ட்..! தலைமைப் பயிற்சியாளராக அதிரடி புரமோஷன்..
IND vs NZ 2nd T20: இளம் தோனி வந்தாச்சு.. ருத்ரதாண்டவமாடிய திலக் வர்மா.. இந்திய அணி த்ரில் வெற்றி!