புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி..! ஹரியானாவை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி

Published : Oct 14, 2022, 10:28 PM IST
புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி..! ஹரியானாவை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டிகளில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி யு மும்பா அணியும், ஹரியானா  ஸ்டீலர்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் வெற்றி பெற்றன.  

புரோ கபடி லீக் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.

பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் கபடி போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெறாத தமிழ் தலைவாஸ் அணி இன்று யு மும்பா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் 39-32 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி யு மும்பா அணி ஜெயித்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிப்பு.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அடுத்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. தொடக்கத்திலிருந்தே ஜெய்ப்பூர் அணி தான் ஆதிக்கம் செலுத்தி ஆடியது. ஹரியானா அணி புள்ளிகளை பெற்றாலும், ஆட்டத்தின் எந்த சூழலிலும் அந்த அணியை ஆதிக்கம் செலுத்தவிடாமல் அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 44-31 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி ஆடவேண்டும்..? இந்திய வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை

இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற டபாங் டெல்லி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று ஹரியானாவை வீழ்த்தி பெற்ற வெற்றியின் மூலம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2ம் இடத்தில் உள்ளது. 3ம் இடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி உள்ளது. இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெறாத தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்