துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – 11 தங்கத்துடன் இந்தியா 4ஆவது இடம்!

By Rsiva kumarFirst Published Oct 1, 2023, 11:04 AM IST
Highlights

ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் டேரியஸ் கினான் செனாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றுள்ளது.

சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவின் டேரியஸ் கினான் செனாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றுள்ளது.

இந்தியாவிற்கு எச்சரிக்கை மணி அடித்த மிட்செல் ஸ்டார் – வார்ம் அப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்!

இந்திய அணி லீடர்போர்டில் 361 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. குவைத் வெள்ளிப் பதக்கத்தையும், சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இந்தப் போட்டியில் டேரியஸ் கினான் செனாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் முதல் 8க்குள் தகுதிச் சுற்றை முடித்துள்ளனர். எனினும், பிற்பகுதியில் நடக்கும் தனிநபர் இறுதிப் போட்டியில் சந்து மற்று கினான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!

இதே போன்று பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக் ஆகியோர் 337 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 356 புள்ளிகளுடன் உலக சாதனையுடன் தங்கம் வென்ற சீனாவை பின்னுக்குத் தள்ளியது. கஜகஸ்தான் 335 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. மனிஷா 114 புள்ளிகளுடன் தனிநபர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்தியா தங்கம் கைப்பற்றிய நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கத்துடன் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!

 

Men's Trap team clinches gold with Kynan and Zoravar Singh through to final in the individual category at pic.twitter.com/OPR2kiLUDK

— M.Sudharshan (@msudh98)

 

click me!