அறிமுக போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி!! வழக்கத்துக்கு மாறாக வெளுத்து வாங்கிய புஜாரா.. இந்திய அணி ஆதிக்கம்

Published : Oct 04, 2018, 11:45 AM IST
அறிமுக போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி!! வழக்கத்துக்கு மாறாக வெளுத்து வாங்கிய புஜாரா.. இந்திய அணி ஆதிக்கம்

சுருக்கம்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அபாரமாக ஆடி இளம் வீரர் பிரித்வி ஷா அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.  

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அபாரமாக ஆடி இளம் வீரர் பிரித்வி ஷா அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் காலை 9.20 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா அறிமுகமாகியுள்ளார். தொடக்க வீரர் ராகுலுடன் களமிறங்கப்போவது அகர்வாலா அல்லது பிரித்வி ஷாவா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், பிரித்வி ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த போட்டியின் மூலம் அறிமுகமாகியுள்ளார். 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கேப்ரியல் பவுலிங்கில் ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து பிரித்வி ஷாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 

இருவருமே நிதானமாகவும் அதேநேரத்தில் தெளிவாக அடித்தும் ஆடினர். அதிலும் அறிமுக போட்டியில் ஆடிவரும் பிரித்வி ஷா, வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பந்தாடி பவுண்டரிகளை விளாசிவருகிறார். பயமோ பதற்றமோ இல்லாமல் தொடக்கம் முதலே அடித்து ஆடிய பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார். 

பிரித்வி ஷாவுடன் சேர்ந்து புஜாராவும் அடித்து ஆடிவருகிறார். வழக்கமாக நிதானமாக ஆடி பொறுமையாக ரன்களை சேர்க்கும் புஜாரா, இந்த போட்டியில் அடித்து ஆடி ரன்களை சேர்த்துவருகிறார். இருவருமே சிறப்பாக ஆடிவருகின்றனர். 

முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தாலும் பிரித்வி ஷா மற்றும் புஜாரா ஜோடி சிறப்பாக ஆடிவருகிறது. பிரித்வி ஷாவை தொடர்ந்து புஜாராவும் அரைசதம் கடந்தார். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 75 ரன்களுடனும் புஜாரா 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்