
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திவருகிறது. இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் தோனி தான் அனைவரையும் காட்டிலும் சீனியர்.
தோனிக்கு வயதும் 36 ஆகிவிட்டது. கடந்த சில தொடர்களில் (தென்னாப்பிரிக்க தொடர் உட்பட) பேட்டிங்கில் தோனி சோபிக்கவில்லை. தோனி பேட்டிங் சரியாக ஆடாதபோதெல்லாம் அவரது வயதையும் காரணம் காட்டி, அணியில் அவரது இருப்பு குறித்த விவாதங்களை சில முன்னாள் வீரர்கள் முன்னெடுக்கின்றனர்.
சச்சினும் இதே பிரச்னையை எதிர்கொண்டார். இறுதியில் 2011 உலக கோப்பையை வென்றவுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். அதேபோலத்தான் தோனியும்.. 2019ம் ஆண்டு உலக கோப்பை அணியில் ஏற்கனவே உலக கோப்பையை வென்ற தோனி இடம்பெறுவது அவசியம். தோனியின் அனுபவம், ஆலோசனை இந்திய அணிக்கு தேவை.
பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும் தற்போது வரை இந்திய அணியின் வெற்றிக்கு தோனியின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவதிலும் ஆலோசனைகளை வழங்குவதிலும் தோனி வல்லவர். இந்திய அணியில் அவ்வளவு எளிதாக வேறு யாரும் பூர்த்தி செய்துவிட முடியாது. தோனி ஓய்வு பெறுவதற்கு முன்பாக அவரது இடத்திற்கு ஒரு வீரரை தயார் செய்தாக வேண்டிய அவசியம் உள்ளது. இது உலக கோப்பைக்கு பின்புதான். உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக விளையாடுவார்.
தென்னாப்பிரிக்க தொடரில் சரியாக பேட்டிங் ஆடாத தோனி மீது தற்போதும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர், இந்திய அணியில் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் தோனியின் பங்களிப்பு உள்ளது.
தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு தேவை. தோனி அணியில் இருப்பது கேப்டன் கோலிக்கு கூடுதல் பலமே என கிரண் மோர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.