காயம் காரணமாக விலகிய வீரர்கள்…

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 03:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
காயம் காரணமாக விலகிய வீரர்கள்…

சுருக்கம்

 

புதுடெல்லி,

மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் சுனிலும், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மன்பிரீத்சிங்கும் ஆசிய சாம்பியன்ச் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டியில் விலக முடிவெடுத்துள்ளனர்.

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் வலைகோல் பந்தாட்ட (ஆக்கி) போட்டி மலேசியாவில் வருகிற 20–ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய வலைகோல் பந்தாட்ட அணியில் இடம் பிடித்து இருந்த முன்கள வீரர் எஸ்.வி.சுனில், நடுகள வீரர் மன்பிரீத்சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

27 வயதான சுனில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தாலும், 24 வயதான மன்பிரீத்சிங் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாகவும் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.

சுனிலுக்கு பதிலாக ரமன்தீப்சிங்கும், மன்தீப்சிங்குக்கு பதிலாக ஆகாஷ்தீப்சிங்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!