Paris Paralympics 2024 | 29 பதக்கங்களுடன் 18வது இடம் பிடித்த இந்தியா! முழு பட்டியல் இதோ!

By Dinesh TG  |  First Published Sep 8, 2024, 4:40 PM IST

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களுடன் 18வது இடத்தைப் பிடித்தது. ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று சாதனை படைத்தனர்.


பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களுடன் 18வது இடத்தை பிடித்து நிறைவு செய்தது. நாட்டிற்காக பதக்கம் வென்றவர்களின் விரிவான பட்டியல் இதோ.

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் இந்தியா வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை பெற்று வெற்றிவாகை சூடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, பூஜா ஓஜாக்கான தடகள போட்டி மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், பெண்களுக்கான கயாக் ஒற்றை 200மீ KL1 ஸ்பிரிண்ட் கேனோயிங் இறுதிப்போட்டியில் பூஜா பதக்க வாய்ப்பை தவறவிட்டார். எனவே, பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவால் 30வது பதக்கத்தை எட்ட முடியவில்லை.

இந்த பாரீஸ் பாராலிம்பிக் தொடரில், இந்தியா ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்களுடன், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 18வது இடத்தைப் பிடித்தது.

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024, இந்தியாவின் 29 பதக்கங்கள் வென்றவர்களின் முழுமையான பட்டியல் இதோ உங்களுக்க்காக.

இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இறுதி நேரத்தி் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆடவருக்கான ஈட்டி எரிதல் எப்41 பிரிவில் நவ்தீப் சிங்கின் வெள்ளிப் பதக்கம் வென்றதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு தங்கப் பதக்கம் வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா ஐந்து தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களுடன் 24வது இடத்தில் இருந்தது. இம்முறை 6 இடங்கள் முன்னேறி 18 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் பதக்கம் வென்றவர்களின் பட்டியல்:

1. பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் அவனி லெகாரா - தங்கம்

2. மோனா அகர்வால் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் SH1 (துப்பாக்கி சுடுதல்) - வெண்கலம்

3. பெண்களுக்கான 100மீ டி35 (தடகளம்) பிரிவில் ப்ரீத்தி பால் - வெண்கலம்

4. ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்) போட்டியில் மணீஷ் நர்வால் - வெள்ளி

5. பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ரூபினா பிரான்சிஸ் - வெண்கலம்

6. பெண்களுக்கான 200மீ டி35 (தடகளம்) பிரிவில் ப்ரீத்தி பால் - வெண்கலம்

7. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 (தடகளம்) போட்டியில் நிஷாத் குமார் - வெள்ளி

8. ஆண்களுக்கான வட்டு எறிதல் F56 (தடகளம்) போட்டியில் யோகேஷ் கதுனியா - வெள்ளி

9. ஆண்களுக்கான SL3 (பேட்மிண்டன்) ஒற்றையர் பிரிவில் நிதேஷ் குமார் - தங்கம்

10. பெண்கள் ஒற்றையர் SU5 (பேட்மிண்டன்) பிரிவில் துளசிமதி முருகேசன் - வெள்ளி

11. பெண்கள் ஒற்றையர் SU5 (பேட்மிண்டன்) போட்டியில் மனிஷா ராமதாஸ் - வெண்கலம்

12. சுஹாஸ் யாதிராஜ் ஆண்கள் ஒற்றையர் SL4 (பேட்மிண்டன்) - வெள்ளி

13. ராகேஷ் குமார் / ஷீத்தல் தேவி கலப்பு அணி (வில்வித்தை) - வெண்கலம்

14. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமித் ஆன்டில் F64 (தடகளம்) - தங்கம்

15. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நித்யா ஸ்ரீ சிவன் SH6 (பேட்மிண்டன்) - வெண்கலம்

16. பெண்களுக்கான 400 மீட்டர் டி20 (தடகளம்) போட்டியில் தீப்தி ஜீவன்ஜி - வெண்கலம்

17. ஆண்களுக்கான ஈட்டி எப்46 (தடகளத்தில்) சுந்தர் சிங் குர்ஜார் - வெண்கலம்

18. ஆண்களுக்கான ஈட்டி எப்46 (தடகளம்) போட்டியில் அஜீத் சிங் - வெள்ளி

19. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்) போட்டியில் மாரியப்பன் தங்கவேலு - வெண்கலம்.

20. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்) பிரிவில் ஷரத் குமார் - வெள்ளி

21. சச்சின் கிலாரி ஆண்கள் ஷாட் புட் F46 (தடகளம்) - வெள்ளி

22. ஆண்கள் தனிநபர் ரீகர்வ் (வில்வித்தை) பிரிவில் ஹர்விந்தர் சிங் - தங்கம்

23. ஆண்கள் கிளப்பில் தரம்பிர் 51 (தடகளம்) - தங்கம்

24. ஆண்கள் கிளப்பில் பிரணவ் சூர்மா 51 (தடகளம்) - வெள்ளி

25. ஜூடோ ஆண்கள் பிரிவில் கபில் பர்மர் - 60 கிலோ (ஜூடோ) - வெண்கலம்

26. பிரவீன் குமார் டி64 உயரம் தாண்டுதல் (தடகளம்) - தங்கம்

27. ஆண்கள் ஷாட் புட்டில் எஃப்57 (தடகளம்) ஹோகாடோ செமா - வெண்கலம்

28. பெண்களுக்கான 200 மீட்டர் டி12 (தடகளம்) போட்டியில் சிம்ரன் சிங் - வெண்கலம்

29. ஆண்களுக்கான ஈட்டி எப்41 (தடகளம்) போட்டியில் நவ்தீப் சிங் - தங்கம்

பாரிஸ் பாராலிம்பிக்கில் புதிய சாதனை: 6வது தங்கத்தை கைப்பற்றிய இந்தியா
 

Tap to resize

Latest Videos

click me!