சூதாட்டப்புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்.. 10 ஆண்டுகள் தடை!!

By karthikeyan V  |  First Published Aug 17, 2018, 4:52 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட் மீதான சூதாட்டப் புகார் உறுதியானதால், அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.


இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பதைப் போல பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 2017ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் என்ற பாகிஸ்தான் வீரர், சூதாட்ட புகாரில் சிக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்திவந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

நசீர் ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார் உண்மையானவை என விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட், பாகிஸ்தான் அணிக்காக 45 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

click me!