டி-20 போட்டி; தென்ஆப்பிரிக்காவை பந்தாடிய இலங்கை...அசத்தல் வெற்றி!

Published : Aug 15, 2018, 02:11 PM ISTUpdated : Sep 09, 2018, 08:11 PM IST
டி-20 போட்டி; தென்ஆப்பிரிக்காவை பந்தாடிய இலங்கை...அசத்தல் வெற்றி!

சுருக்கம்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு டி-20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு டி-20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முன்னதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதலில் டாஸ் தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டி காக், அம்லா ஆகியோர் களமிறங்கினார்கள். இலங்கை அணி பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென்ஆப்பிரிக்கா 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 20 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய சண்டகன் 3, சில்வா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

பின்னர் 99 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்று தென்ஆப்பிரிக்கா வேகத்தில் அசத்தியது. இறுதியில் இலங்கை 16.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக சண்டிமல் 36, டி சில்வா 31 ரன்கள் எடுத்தனர். 

PREV
click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!