பாகிஸ்தான் கேப்டனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய ஆஸ்திரேலிய பவுலர்!!

Published : Oct 19, 2018, 03:23 PM IST
பாகிஸ்தான் கேப்டனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய ஆஸ்திரேலிய பவுலர்!!

சுருக்கம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அபுதாபியில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 81 ரன்கள் குவித்தார். அந்த இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பவுன்சர் பந்து ஒன்று, சர்ஃபராஸ் அகமதுவின் ஹெல்மெட்டில் அடித்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து பேட்டிங் செய்து 81 ரன்களை குவித்தார் சர்ஃபராஸ்.

ஆனால் நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் சர்ஃபராஸ் ஆடவில்லை. இன்று காலை சர்ஃபராஸ் அகமதுவிற்கு தலைவலி ஏற்பட்டதால் ஸ்கேன் செய்து பரிசோதிப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதனால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக முகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்
பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி