”ரிக்கி பாண்டிங்”கின் பெஸ்ட் லெவனில் ஒரே ஒரு இந்திய வீரர்..!

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
”ரிக்கி பாண்டிங்”கின் பெஸ்ட் லெவனில் ஒரே ஒரு இந்திய வீரர்..!

சுருக்கம்

only one indian player in ponting best eleven

பாரம்பரிய லார்ட்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனது பெஸ்ட் லெவன் அணியை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ள அணியில், ஒரே ஒரு இந்திய வீரர்தான் இடம்பெற்றுள்ளார். 

பாண்டிங்கின் பெஸ்ட் லெவனில், 5 ஆஸ்திரேலிய வீரர்கள், 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானிலிருந்து தலா ஒரு வீரர் இடம்பிடித்துள்ளனர். 

இந்தியாவிலிருந்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினை மட்டும் தான் தனது பெஸ்ட் லெவனில் தேர்வு செய்துள்ளார் ரிக்கி பாண்டிங். அந்த அணியின் கேப்டனாக முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககராவையும் விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்டையும் தேர்வு செய்துள்ளார் பாண்டிங்.

ரிக்கி பாண்டிங்கின் பெஸ்ட் லெவன் அணி:

மாத்யூ ஹைடன்(ஆஸி), ஜஸ்டின் லாங்கர் (ஆஸி), ஜாக் காலிஸ்(தென் ஆப்பிரிக்கா), சச்சின் டெண்டுல்கர்(இந்தியா), பிரையன் லாரா(வெஸ்ட் இண்டீஸ்), சங்ககரா(கேப்டன்),  ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸி, விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே(ஆஸி), வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்), ஆம்புரூஸ்(வெஸ்ட் இண்டீஸ்) கிளென் மெக்ராத்(ஆஸி)
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்