இந்திய அணியில் ஒரே ஒரு பேட்ஸ்மேன் மட்டும்தான் அந்த மாதிரி!!

By karthikeyan VFirst Published Nov 26, 2018, 2:35 PM IST
Highlights

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முரளி விஜய், ரோஹித் சர்மா மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய மூவரும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என சமனானது. இதையடுத்து வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியமானது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முரளி விஜய், ரோஹித் சர்மா மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய மூவரும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். வெளிநாடுகளில் நீண்டகாலமாக சிறப்பாக ஆடிவருபவரான முரளி விஜயும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸாகும் என்பதால் பவுன்ஸரை ஆடுபவரான ரோஹித் சர்மாவும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அதேபோல் பேட்டிங்கில் ஓரளவு சோபித்தாலும் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவருவதால் பார்த்திவ் படேலும் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் மிக முக்கியம். விக்கெட் கீப்பிங்கில் சிறு தவறு செய்துவிட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அனுபவ விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பண்ட், பார்த்திவ் படேல் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே அணியில் ஆடுவர். இவர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே களமிறக்கப்படுவர் என்பதால், அந்த ஒருவரை தவிர ஆடும் லெவனில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே வலது கை பேட்ஸ்மேன்கள் தான். பிரித்வி ஷாவுடன் முரளி விஜய் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார். 

பின்னர், வழக்கம்போல புஜாரா, கோலி, ரஹானே ஆகியோர் களமிறங்குவர். 6ம் வரிசையில் ரோஹித் அல்லது ஹனுமா விஹாரி இறங்குவார். 7ம் வரிசையில் பண்ட் அல்லது பார்த்திவ் படேல். இந்த 7 பேட்ஸ்மேன்களில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ள வீரர் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே வலது கை பேட்ஸ்மேன்கள் தான். குல்தீப் யாதவ் இடது கை பேட்டிங்தான் பிடிப்பார் என்றாலும் பேட்ஸ்மேன்களை பொறுத்தமட்டில் பண்ட் அல்லது பார்த்திவ் இருவரில் ஒருவர் களமிறங்கினால் ஆடும் லெவனில் ஒரே ஒரு இடது கை பேட்ஸ்மேன் தான். எனவே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வீசுவதில் பெரியளவில் சிக்கல் எதுவும் இருக்காது. 
 

click me!