175 என்ற நம்பர்ல இருக்கு இந்திய அணியின் விதி!!

By karthikeyan VFirst Published Dec 17, 2018, 5:19 PM IST
Highlights

175 என்ற எண் இந்திய அணிக்கு ராசியான எண்ணா இல்லையா என்பது நாளைதான் தெரியவரும். ஆனால் பெரும்பாலும் அந்த எண்ணிற்கும் இந்திய அணிக்கும் இடையேயான உறவு நேர்மறையானதாக இருப்பதற்கான சாத்தியம் குறைவுதான். 

175 என்ற எண் இந்திய அணிக்கு ராசியான எண்ணா இல்லையா என்பது நாளைதான் தெரியவரும். ஆனால் பெரும்பாலும் அந்த எண்ணிற்கும் இந்திய அணிக்கும் இடையேயான உறவு நேர்மறையானதாக இருப்பதற்கான சாத்தியம் குறைவுதான். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களையும் இந்திய அணி 283 ரன்களையும் எடுத்தது. 

43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேரமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே இந்த போட்டியில் எஞ்சியுள்ளதால், போட்டி ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக திரும்பியுள்ள நிலையில், இந்திய அணி நாளை கடுமையாக போராட வேண்டும். 

இதற்கும் 175 என்ற எண்ணுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கலாம். 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள்(நேற்று) ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. அதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியை விட 175 ரன்கள் முன்னிலை வகித்தது. 

நான்காம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பின்னர் 287 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்த நிலையில், நான்காம் நாளை முடித்தது. இதன்மூலம் வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவை என்ற நிலையில், நான்காம் நாளை முடித்தது இந்திய அணி. 

மூன்றாம் நாளை இந்திய அணியை விட 175 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி முடித்த நிலையில், அதே 175 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், இந்திய அணி நான்காம் நாளை முடித்தது. 
 

click me!