முன்னெல்லாம் ஒருசில அணிகள்தான் பலமா இருக்கும்; இப்போ நிறைய அணிகள் பலமா இருக்கு – சங்ககாரா…

 
Published : May 31, 2017, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
முன்னெல்லாம் ஒருசில அணிகள்தான் பலமா இருக்கும்; இப்போ நிறைய அணிகள் பலமா இருக்கு – சங்ககாரா…

சுருக்கம்

now a days so many teams are strong - Sangakkara

முந்தைய காலங்களில் ஒன்றிரண்டு அணிகளே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான அணிகள் வலுவான அணிகளாக உருவெடுத்துள்ளன என முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் வியாழக்கிழமை இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா கூறியது:

“சாம்பியன்ஸ் டிராபியில் இந்த முறை நான்கு ஆசிய அணிகள் பங்கேற்கின்றன. ஆசியாவைப் பொறுத்த வரையில் இந்திய அணிதான் முன்னணி அணியாக திகழ்கிறது.

2013-ல் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வாகை சூடியது. இந்த முறையும் கோப்பையை வெல்லும் தகுதி அந்த அணிக்கு உள்ளது.

இந்திய அணி வலுவான அணியாகவும், சமபலம் கொண்ட அணியாகவும் உள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சு மிக வலுவாக உள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஒரு நாள் போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் திணறிய விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீள்வது உறுதி.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினம். அதேநேரத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

முந்தைய காலங்களில் ஒன்றிரண்டு அணிகளே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தின. அதனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிக்க முடிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான அணிகள் வலுவான அணிகளாக உருவெடுத்துள்ளன. தற்போதைய நிலையில் 4 அல்லது 5 அணிகள் சமபலம் கொண்டவையாக உள்ளன. அவையனைத்துமே பெரிய போட்டிகளில் கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளன” என்று கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு