
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் 240 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இலண்டனில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணியில் ரோஹித் சர்மா 1 ஓட்டத்தில் வெளியேற, பின்னர் வந்த அஜிங்க்ய ரஹானே 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
பின்னர் ஷிகர் தவனுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 60 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பிறகு வந்த கேதார் ஜாதவ் 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 94 ஓட்டங்கள் சேர்த்து ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.
பிறகு களம்புகுந்த ஹார்திக் பாண்டியா வெளுத்து வாங்க அவர் ரவீந்திர ஜடேஜா 32 ஓட்டங்கள், அஸ்வின் 5 ஓட்டங்களில் வெளியேறினர்.
இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ஓட்டங்கள் குவித்தது இந்தியா.
ஹார்திக் பாண்டியா 80 ஓட்டங்கள், புவனேஸ்வர் குமார் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் ரூபெல் ஹுசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வங்கதேச அணியில் செளம்ய சர்க்கார் 2 ஓட்டங்களில் வெளியேற சபீர் ரஹ்மான் 0, இம்ருள் கயெஸ் 7 ஓட்டங்கள், ஷகிப் அல்ஹசன் 7 ஓட்டங்கள், மகமதுல்லா 0, மொஸாதீக் ஹுசைன் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 7.3 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம். பின்னர் வந்தவர்களில் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 13 ஓட்டங்கள், மெஹதி ஹசன் மிராஸ் 24 ஓட்டங்கள், சன்ஸாமுல் இஸ்லாம் 18 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இறுதில் 23.5 ஓவர்களில் 84 ஓட்டங்களுக்கு சுருண்டது வங்கதேசம்.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பயிற்சி ஆட்டத்தில் அசத்தலாக ஆடிய இந்திய அணி இதே ஃபார்மில் இருந்து ஒரிஜினல் ஆட்டத்திலும் வென்றால் நல்லதே.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.