ஒரு இந்திய வீரருக்கு கூட தகுதியில்ல!! அசிங்கப்படுத்திய அலெஸ்டர் குக்

By karthikeyan VFirst Published Sep 6, 2018, 2:50 PM IST
Highlights

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் அலெஸ்டர் குக், வெளியிட்டுள்ள கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
 

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் அலெஸ்டர் குக், வெளியிட்டுள்ள கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் அலெஸ்டர் குக், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுள்ளது. 

ஆனால் அந்த அணியின் சீனியர் வீரரான அலெஸ்டர் குக், இந்த தொடரில் சோபிக்கவில்லை. ஒரு இன்னிங்ஸில் கூட அவர் சரியாக ஆடவில்லை. 4 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் ஆடி, 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அண்மைக்காலமாகவே குக் சரியாக ஆடவில்லை. ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். 

இந்தியாவுடன் சரியாக ஆடாதநிலையில், இந்தியாவுக்கு எதிராக நாளை தொடங்க உள்ள கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தங்களது கனவு அணியை வெளியிடுவது வழக்கம். 

அதேபோல, அலெஸ்டர் குக்கும் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற தலைசிறந்த இந்திய வீரர்கள் இருந்தாலும், அவர்களில் ஒருவரை கூட குக் தேர்வு செய்யவில்லை. 

குக்கின் கனவு அணியில் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தவிர தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளிலிருந்து தலா 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

அலெஸ்டர் குக்கின் கனவு அணி:

கிரகாம் கூச்(கேப்டன்-இங்கிலாந்து), மேத்யூ ஹைடன்(ஆஸ்திரேலியா), பிரயன் லாரா(வெஸ்ட் இண்டீஸ்), ரிக்கி பாண்டிங்(ஆஸ்திரேலியா), ஏபி டிவில்லியர்ஸ்(தென்னாப்பிரிக்கா), குமார் சங்ககரா(விக்கெட் கீப்பர் - இலங்கை), ஜாக் காலிஸ்(தென்னாப்பிரிக்கா), ஷேன் வார்னே(ஆஸ்திரேலியா), முத்தையா முரளிதரன்(இலங்கை), ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கிலாந்து), கிளென் மெக்ராத்(ஆஸ்திரேலியா)
 

click me!