இந்தியாவை சமாளிக்க நீங்க 2 பேரும் கண்டிப்பா வேணும்!! உடனே வாங்க.. நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Jan 29, 2019, 10:34 AM IST
Highlights

இந்திய அணியிடம் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று தொடரை 3-0 என இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, கடைசி 2 போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அதனால் அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 
 

இந்திய அணியிடம் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று தொடரை 3-0 என இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, கடைசி 2 போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அதனால் அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றிலுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. 

முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி மீது இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. 3 போட்டிகளில் ஒரு சூழ்நிலையில் கூட அந்த அணி, இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தவோ, நெருக்கடி கொடுக்கவோ இல்லை. மூன்றாவது போட்டியில் டெய்லர் - லதாம் பார்ட்னர்ஷிப் மட்டும் தான் அந்த அணியின் குறிப்பிடத்தகுந்த ஆட்டம்.

அதைத்தவிர மற்ற அனைத்து தருணங்களிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே இந்திய அணி தான் ஆதிக்கம் செலுத்தியது. தோற்பது பெரிய விஷயமல்ல, ஆனால் நாங்கள் தோற்கும் விதம்தான் வருத்தமளிக்கிறது என்று இரண்டாவது போட்டியின் முடிவில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்திருந்தார். 

அந்த அணியின் தொடக்க ஜோடி கப்டில் - முன்ரோ டோட்டல் வேஸ்ட். இவர்கள் இருவரும் 3 போட்டிகளில் ஒன்றில் கூட சோபிக்கவில்லை. அதேபோல இரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது இந்திய அணியின் ஸ்பின் பவுலிங்தான். குல்தீப்பும் சாஹலும் நியூசிலாந்து பேட்டிங் வரிசையை சரித்துவிட்டனர். அதே நேரத்தில் அந்த அணியின் ஸ்பின்னர் இஷ் சோதி, அப்படியான அபாரமான பவுலிங்கை போட்டு விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. 

சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வியடைந்து தொடரை இழந்த நியூசிலாந்து அணி, கடைசி 2 போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. அதற்காக அணியில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. 

3 போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காத ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷமை அணியில் சேர்த்துள்ளது. இலங்கை தொடரில் தொடையில் காயம் ஏற்பட்டதால் இந்திய அணிக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் சேர்க்கப்படாத நீஷம், இந்திய அணியை சமாளிப்பதற்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மீடியம் ஃபாஸ்ட் பவுலிங் போடும் நீஷம், பின்வரிசையில் இறங்கி கடைசி ஓவர்களில் அடித்து ஆடக்கூடியவர். அதேபோல ஸ்பின்னர் இஷ் சோதியை நீக்கிவிட்டு ஆஸ்டிலை அணியில் சேர்த்துள்ளனர். 

கடைசி 2 ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம், நிகோல்ஸ், ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், ஆஸ்டில், ஃபெர்குசன், மிட்செல் சாண்ட்னெர், டிரெண்ட் போல்ட், டிம் சௌதி.
 

click me!