இவங்க 2 பேருல உலக கோப்பைக்கு யாரை கூட்டிட்டு போகலாம்? நறுக்குனு பதில் சொன்ன முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்

By karthikeyan VFirst Published Feb 18, 2019, 10:22 AM IST
Highlights

தற்போதைய சூழலில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய மூவர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். சரியாக 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடியாது. ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தேவை.

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது. ரிசர்வ் தொடக்க வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையே இருந்தது. அதிலும் ரிசர்வ் தொடக்க வீரர் கேஎல் ராகுல்தான் என்பதை தேர்வுக்குழு உறுதி செய்துவிட்டது. சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் இந்தியா ஏ அணியில் ஆடிய கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

எனவே இவர்தான் உலக கோப்பையிலும் ஆடுவார். புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக உலக கோப்பை அணியில் இடம்பெறுவர். ஆடும் லெவனில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஹர்திக் பாண்டியா மூன்றாவது ஆப்சனாக இருப்பார். தேவைப்பட்டால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும்.

தற்போதைய சூழலில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய மூவர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். சரியாக 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்று, ஒருவேளை யாராவது ஒரு வீரருக்கு காயம் என்றால், மாற்று வீரர் இல்லாமல் போய்விடும். 

அந்த வகையில் நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேவை உள்ளது. இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவருக்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அவரது பந்தில் வேகம் இல்லை என்பதோடு அதிகமான ரன்களையும் விட்டுக்கொடுத்தார். 

எனவே அவர் மீதி திருப்தியடையாத தேர்வுக்குழு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரை புறக்கணித்துவிட்டது. யார் அந்த இடத்தை பிடிப்பார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ரஞ்சி டிராபியில் அபாரமாக வீசி 4 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ் யாதவ், மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை என்றாலும், டி20யில் நன்றாக பந்துவீசினால் உலக கோப்பையில் ரிசர்வ் பவுலராக இடம்பெற வாய்ப்புள்ளது. 

இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த சஞ்சய் மஞ்சரேக்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் உமேஷ் யாதவ் இடம்பெறவில்லை என்றாலும், உலக கோப்பைக்கான அணியில் கடைசி நேரத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், உலக கோப்பையில் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் - கலீல் இருவரில் யாரை எடுக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, உமேஷ் யாதவ் உலக கோப்பையில் பந்துவீசிய அனுபவம் பெற்றவர். உமேஷ் யாதவ் உலக கோப்பைக்கு சென்றால், 2015 உலக கோப்பையில் ஆடிய வேகப்பந்து வீச்சு யூனிட்டாக இருக்கும். பும்ரா கூடுதல் உத்வேகமாக இருப்பார். ஆனால் கலீல் அகமதுவிற்கோ அனுபவம் கிடையாது. வேகமாக வீச முடியாமல் திணறுகிறார். இளம் பவுலர்களுக்கு இது நேரத்தான் செய்யும். அவர் இன்னும் நிறைய கற்று திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நெஹ்ரா தெரிவித்துள்ளார். 

கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவிற்கு இங்கிலாந்து தொடரில் அணியில் இடம்கிடைத்தது. ஆனால் ஐபிஎல்லில் வீசியதை போல இங்கிலாந்தில் வீச தவறிவிட்டார் உமேஷ் யாதவ். 

2018ம் ஆண்டில் மட்டும் 4 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள உமேஷ் யாதவ், 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். 4 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியில் சரியாக சோபிக்காததை அடுத்து விதர்பா அணிக்காக ரஞ்சி தொடரில் ஆடிய உமேஷ் யாதவ், மீண்டும் அபாரமாக வீசினார். 4 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் உமேஷ் யாதவ். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!