வாசிம் அக்ரம் சொன்னது வாஸ்தவம் தான்!! பும்ரா ஒப்புதல்

By karthikeyan VFirst Published Feb 17, 2019, 8:43 PM IST
Highlights

வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனைக் கொண்டுள்ள பும்ரா, குறைந்த தூரமே ஓடி நல்ல வேகத்தை ஜெனரேட் செய்கிறார். பந்துக்கு பந்து வெரைட்டி, நல்ல வேகம், துல்லியமான யார்க்கர் என மிரட்டலாக பந்துவீசி, எதிரணிகளை திணறடித்து வருகிறார். 
 

பொதுவாக பேட்டிங் அணியாகவே அறியப்பட்ட இந்திய அணி, தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பும்ராவின் வருகை. இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழும் பும்ரா, சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலராக வலம்வருகிறார். 

வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனைக் கொண்டுள்ள பும்ரா, குறைந்த தூரமே ஓடி நல்ல வேகத்தை ஜெனரேட் செய்கிறார். பந்துக்கு பந்து வெரைட்டி, நல்ல வேகம், துல்லியமான யார்க்கர் என மிரட்டலாக பந்துவீசி, எதிரணிகளை திணறடித்து வருகிறார். 

குறிப்பாக டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர் பும்ரா. டெத் ஓவர்களில் அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிவதற்கான காரணங்களில் ஒன்று அவரது யார்க்கர். டெத் ஓவர்களில் பும்ரா யார்க்கர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். ஆனால் பும்ராவின் யார்க்கர் தவறாது, மிக துல்லியமாக இருக்கும். மிக துல்லியமாக யார்க்கர்களை வீசுவார். 

அண்மையில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ஷான் மார்ஷுக்கு ஒரு அபாரமான ஸ்லோ யார்க்கர் போட்டார். அந்த பந்தில் எல்பிடபிள்யூ ஆன ஷான் மார்ஷ், அதிர்ச்சியில் உறைந்தார். பும்ரா வீசிய பந்தில் அதிர்ச்சியடைந்த ஷான் மார்ஷ், அதிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் ஆனது. 

பும்ரா யார்க்கர்களை வீசுவதில் வல்லவர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பாராட்டியிருந்தார். அதுமட்டுமல்லாமல் தானும் சரி பும்ராவும் சரி, சிறு வயதில் டென்னிஸ் பந்தில் பவுலிங் போட்டு பழகியவர்கள் என்பதுதான் யார்க்கர்களை துல்லியமாக வீசுவதற்கான காரணம் என்று தெரிவித்திருந்தார்.

தான் துல்லியமாக யார்க்கர் வீசுவதற்கு வாசிம் அக்ரம் கூறிய அதே காரணத்தைத்தான் பும்ராவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய பும்ரா,  சிறு வயதில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடிய சமயத்தில், யார்க்கரைத் தவிர வேறு பந்து போட முடியாது. அப்போது யார்க்கர் போட்டு பழகியதுதான் பிற்காலத்தில் சீரியஸாக கிரிக்கெட் ஆட தொடங்கியதும் உதவியது என்று பும்ரா தெரிவித்துள்ளார். 
 

click me!