ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடத்தை பிடித்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை

Published : May 22, 2023, 09:37 PM ISTUpdated : May 22, 2023, 10:32 PM IST
ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடத்தை பிடித்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை

சுருக்கம்

உலக ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  

ஆடவர் ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடத்தை பிடித்து இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் தங்கம் வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் நீரஜ் சோப்ரா.

இப்போது ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  1455 புள்ளிகளுடன் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் 1433 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். செக் குடியரசின் ஜாகூப் 3ம் இடத்தில் உள்ளார்.

ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசை:

1. நீரஜ் சோப்ரா - 1455 புள்ளிகள்

2. ஆண்டர்சன் பீட்டர்ஸ் - 1433 புள்ளிகள்

3. ஜாகூப் வத்லேஜ் - 1416 புள்ளிகள்

4. ஜூலியன் வெபர் - 1385 புள்ளிகள்

5. அர்ஷத் நதீம் - 1306 புள்ளிகள்

இந்தியாவை சேர்ந்த மற்ற இந்திய வீரர்களான ரோஹித் யாதவ் 15ம் இடத்திலும், டி.பி.மானு 17ம் இடத்திலும் உள்ளனர். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
மெஸ்ஸி, கால்பந்து ரசிகர்களிடம் மன்னி‍ப்பு கேட்ட மம்தா பானர்ஜி..! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதிரடி கைது!