இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற கடுமையாக பாடுபட வேண்டும் - முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்...

 
Published : May 05, 2018, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற கடுமையாக பாடுபட வேண்டும் - முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்...

சுருக்கம்

need to work hard to get back lost hope - former Captain Steve Smith ...

இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற கடுமையாக பாடுபட வேண்டி உள்ளது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின்பேரில் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பான்கிராப்ட் ஆகியோர் மீது விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

பின்னர், அவர்கள் கிரிக்கெட் விளையாட அதிரடியாக தடை விதித்துள்ளது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று ஸ்மித் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தடை விதிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் தங்கள் ஆதரவை எனக்கு தெரிவித்துள்ளனர். இதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். 

எனினும் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற கடுமையாக பாடுபடவேண்டியுள்ளது. குடும்பமே ஒருவருக்கு மிகவும் முக்கியமானதாகும்" என்று அவர் தெரிவித்தார். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind Vs SA: பிரசித், குல்தீப் மாயாஜாலம்.. 270 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா..! தொடரை வெல்லும் இந்தியா..?
இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!