தேசிய துப்பாக்கி சுடுதல்: பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கிலுக்கு ஐந்து தங்கங்கள்...

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
தேசிய துப்பாக்கி சுடுதல்: பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கிலுக்கு ஐந்து தங்கங்கள்...

சுருக்கம்

National rifle shooters Five golden pearls in Punjab

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கில் தங்கம் வென்றுள்ளார்.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் 457.6 புள்ளிகளுடன் அஞ்சும் முட்கில் முதலிடம் பிடித்தார்.

இந்தப் போட்டியின் அணிகளுக்கான பிரிவிலும் முட்கில் தங்கம் வென்றதையடுத்து இப்போட்டியில் இதுவரை அவர் வென்ற மூன்று தங்கத்தையும் சேர்த்து, அவரது மொத்தம் ஐந்து  தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தப் பிரிவில் ஜம்மு காஷ்மீரின் ஷ்ரேயா சக்ஸனா 452.9 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தை பிடித்தார்.

ராணுவ வீராங்கனையான ராஜ் செளதரி 439.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தை பிடித்தார்.

இதனிடையே, 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணிகளுக்கான பிரிவில் அஞ்சும் முட்கில், தில்ரீன் கில், அவ்னிஷ் கெளர் சித்து ஆகியோர் அடங்கிய பஞ்சாப் அணி 1730 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது.

மகாராஷ்டிரம் 1714 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், கேரளம் 1711 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றன.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரிங்கு சிங் இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு? பிசிசிஐ-யின் ரகசிய பிளான் அம்பலம்!
இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் சஞ்சு சாம்சன் மேனியா! எல்லை தாண்டி ஒலிக்கும் 'சஞ்சு' நாமம்!