தேசிய அளவில் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம் -எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கிறது...

 
Published : Jan 29, 2018, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
தேசிய அளவில் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம் -எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கிறது...

சுருக்கம்

National Games for Girls Today Start - MOP Vaishnava College combines ...

சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கும் 13-வது தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் (வாஸ்போ) இன்று தொடங்குகிறது.

சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி ஒருங்கிணைக்கும் 13-வது தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் (வாஸ்போ) இன்று தொடங்குகி வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இந்த  விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி சேத்துப்பட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழக யூனியன் மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதில் முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரரும், டென்னிஸ் பயிற்சியாளருமான ரமேஷ் கிருஷ்ணன் தலைமை விருந்தினராகவும், இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.

மொத்தம் 8 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் சுமார் 1000 பேர் வரையில் பங்கேற்க வாய்ப்புகள் உண்டு.

இப்போட்டியில் பெங்களூரு, ஐதராபாத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஈரோடு, நாமக்கல், , திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், சென்னையைச் சேர்ந்த கல்லூரிகள் கலந்து கொள்கின்றன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி
ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!