
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணியை 85-83 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது கர்நாடக அணி.
சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 68-ஆவது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 'ஏ' பிரிவு ஆட்டத்தில் கர்நாடகம் 85-83 என்ற கணக்கில் உத்தரகண்டை வென்றது. கர்நாடக தரப்பில் அரவிந்த் அதிகமாக 34 புள்ளிகள் பெற்றார்.
இதர ஆட்டங்களில் கேரளம் 87-72 என்ற கணக்கில் ராஜஸ்தானையும், 'எஃப்' பிரிவு ஆட்டத்தில் மேற்கு வங்கம் 54-49 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தையும் வென்றது.
அதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 67-57 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது. உத்தர பிரதேச வீரர் புல்கிட் அதிகமாக 15 புள்ளிகளை கைப்பற்றினார்.
'டி' பிரிவில் டெல்லி அணி 68-50 என்ற கணக்கில் ஆந்திர பிரதேசத்தை வீழ்த்தியது. டெல்லி வீரர் கிரிக் யாதவ் அதிகபட்சமாக 15 புள்ளிகள் வென்றார்.
'சி' பிரிவில் சர்வீசஸ் அணி 87-26 என்ற கணக்கில் கோவாவையும், சத்தீஸ்கர் 45-19 என்ற கணக்கில் சிக்கிமையும் வீழ்த்தின.
மகளிருக்கான 'பி' பிரிவில் இந்திய ரயில்வே 98-47 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தை யும், 'சி' பிரிவில் உத்தரப் பிரதேசம் 59-30 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத்தையும் வீழ்த்தியது.
மகளிர் பிரிவில் சத்தீஸ்கர் அணி 93-85 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணியை வீழ்த்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.