சென்னை எனக்கு இரண்டாவது வீடு - தோனி நெகிழ்ச்சி

 
Published : Jan 19, 2018, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
சென்னை எனக்கு இரண்டாவது வீடு - தோனி நெகிழ்ச்சி

சுருக்கம்

chennai is my second home said dhoni

சென்னை எனக்கு இரண்டாவது வீடு என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் மீண்டும் களம் காண்கிறது. தோனியின் தலைமையில் 2 முறை ஐபிஎல் தொடரை வென்ற சென்னை அணி, 4 முறை இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள 10 சீசனில் 6 சீசனில் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்த சென்னை அணி இந்த ஆண்டு மீண்டும் களம் காண்கிறது. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மற்ற அணிகளைக் காட்டிலும் சென்னை அணி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளது. சென்னை அணி மீண்டும் களம் காண்பதால், சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்குவது குறித்தும் சென்னை அணியின் வீரர்கள் குறித்தும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், நமது ஆதரவாளர்கள் அதிகரிக்கவே செய்திருக்கின்றனர். அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமும்கூட. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை; எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. 18- 20 வீரர்களை இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கு அணியில் எடுத்த திட்டமிட்டுள்ளோம். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக இருக்கிறது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு. சென்னை எனக்கு எப்போதுமே தனி சிறப்புடையதுதான். என்னுடைய டெஸ்ட் போட்டியில் அதிக ஸ்கோர் சென்னையில்தான் அடித்துள்ளேன். அனைத்து வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணியில் எப்போதுமே இருக்கும். இதுவே சென்னை அணியின் சிறப்பு. சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது என உற்சாகமாக தெரிவித்தார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா