
நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தில் நடைபெறுகிறது. இந்தியா -ஜப்பான் மோதிய இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவுக்கு, 7-வது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதை அற்புதமாக கோலாக்கினார் ரூபிந்தர்.
அடுத்து, ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் விவேக் சாகர் பந்தை அருமையாக கடத்திச் சென்று தனது முதல் கோலை பதிவு செய்தார்.
தொடர்ந்து 28-வது நிமிடத்திலும் அவர் 2-வது கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 3-0 என முன்னிலை பெற்றது இந்தியா.
பிற்பாதியிலும் இந்தியாவை எதிர்கொள்ள இயலாமல் திணறியது ஜப்பான். 35-வது நிமிடத்தில் மன்பிரீத் சிங் உதவியுடன் இந்தியாவுக்கான 4-வது கோலை பதிவு செய்தார் தில்பிரீத் சிங்.
அதேபோல், 41-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலமாக இந்தியாவை 5-0 என முன்னிலைப்படுத்தினார் ஹர்மன்பிரீத் சிங்.
கடைசியாக தில்பிரீத் சிங் 45-வது நிமிடத்தில் தனது 2-வது கோல் பதிவு செய்ய, இறுதியில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.