5-வது இடத்தில் இருக்கும் நடால், 31-வது இடத்தில் இருக்கும் விக்டோரிடம் தோல்வி…

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 02:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
5-வது இடத்தில் இருக்கும் நடால், 31-வது இடத்தில் இருக்கும் விக்டோரிடம் தோல்வி…

சுருக்கம்

ஷாங்காய்

உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 3-6, 6-7 (3-7) என்ற நேர்செட்டில் 31-வது இடத்தில் இருக்கும் விக்டோர் டிரிக்கிடம் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபியோ போக்னியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்டீவ் ஜான்சனை (அமெரிக்கா) எளிதில் வென்றார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 3-6, 6-7 (3-7) என்ற நேர்செட்டில் 31-வது இடத்தில் இருக்கும் விக்டோர் டிரிக்கிடம் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் கெய்ல் எட்முர்ட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

இதற்கிடையில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி அடுத்த மாதம் லண்டனில் நடைபெறும் உலக டூர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ‘டாப்-8’ வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு தகுதி பெற்ற 5-வது வீரர் நிஷிகோரி ஆவார். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sonal Dinusha: தோல்வியின் விளிம்பிலிருந்து இலங்கையை மீட்ட சோனல் தினுஷா... கொழும்புவில் நடந்தது என்ன?
IND vs SL: 5-வது நாள் ஆட்டம் த்ரில்... 16 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை.. ஆதிக்கம் செலுத்தும் இந்தியா