கடைசி போட்டியில் தொடக்க ஜோடியில் அதிரடி மாற்றம்..?

By karthikeyan VFirst Published Feb 2, 2019, 11:58 AM IST
Highlights

நியூசிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பியது. அதன் விளைவாகவே படுதோல்விகளை சந்தித்தது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்டில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ளன. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. நான்காவது போட்டியில் இந்திய அணியை 92 ரன்களுக்குள் சுருட்டி, அதை 15வது ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பியது. அதன் விளைவாகவே படுதோல்விகளை சந்தித்தது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க ஜோடி ஒரு போட்டியில் கூட சோபிக்கவில்லை. அதனால் கடந்த போட்டியில் கோலின் முன்ரோ நீக்கப்பட்டு, கப்டிலுடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிகோல்ஸ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். 

கடந்த போட்டியில் மார்டின் கப்டில் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக கடைசி போட்டியில் மீண்டும் கோலின் முன்ரோ அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்ரோ முதல் 3 போட்டிகளிலும் சேர்த்தே 47 ரன்கள் மட்டுமே அடித்தார். அவர் சரியாக ஆடாததால் தான் நான்காவது போட்டியில் நீக்கப்பட்டார். இந்நிலையில் கப்டில் காயமடைந்ததால் கடைசி போட்டியில் அவருக்கு பதிலாக மீண்டும் முன்ரோ அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. கடைசி போட்டியில் முன்ரோவும் நிகோல்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்குவர் என கூறப்படுகிறது. 
 

click me!