ஆரம்பத்திலேயே அதகளப்படுத்திய சூர்யகுமார்-லிவைஸ் ஜோடி!! அபார பேட்டிங்.. 9 ஓவருக்கே 100 ரன்!! மிரட்டிய மும்பை.. தெறித்த டெல்லி

 
Published : Apr 14, 2018, 05:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
ஆரம்பத்திலேயே அதகளப்படுத்திய சூர்யகுமார்-லிவைஸ் ஜோடி!! அபார பேட்டிங்.. 9 ஓவருக்கே 100 ரன்!!  மிரட்டிய மும்பை.. தெறித்த டெல்லி

சுருக்கம்

mumbai indians batting amazing start by suryakumar and lewis

சூர்யகுமார் யாதவ் - லீவைஸ் ஜோடியின் அதிரடி பேட்டிங்கால், 9 ஓவருக்கே 100 ரன்களை எட்டியது மும்பை அணி.

ஐபிஎல் 11வது சீசனில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுவருகிறது. இதற்கு முன்னதாக விளையாடிய 2 போட்டிகளிலும் 2 அணிகளும் தோல்வியடைந்தன.

அதனால் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் காம்பீர், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் லிவைஸ் களமிறங்கினர். கடந்த இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சரியாக ஆடாததால், இந்தமுறை சூர்யகுமாரை தொடக்கத்தில் இறக்கினார்.

ரோஹித்தின் முயற்சி சிறப்பான பலனை தந்தது. முதல் விக்கெட்டுக்கு சூர்யகுமார்-லிவைஸ் ஜோடி, 102 ரன்களை குவித்தது. இருவரின் அதிரடி ஆட்டத்தால், 9வது ஓவரிலேயே மும்பை 100 ரன்களை எட்டியது. 

சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த லிவைஸ், 48 ரன்னிலும் சூர்யகுமார் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ரோஹித்தும் இஷான் கிஷானும் ஆடிவருகின்றனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?