ரோஹித்துக்கு வேலையே கொடுக்காம மொக்கையா முடிந்த போட்டி!!

By karthikeyan VFirst Published Oct 14, 2018, 1:11 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் பீகாருக்கு எதிரான காலிறுதி போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 
 

விஜய் ஹசாரே தொடரில் பீகாருக்கு எதிரான காலிறுதி போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

விஜய் ஹசாரே தொடரில் மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, ஹைதராபாத், பீகார், ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

பெங்களூருவில் இன்று இரண்டு காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. ஒரு போட்டியில் மும்பை மற்றும் பீகார் அணிகள் மோதின. மற்றொரு போட்டியில் டெல்லியும் ஹரியானாவும் ஆடிவருகின்றன. 

இதில் மும்பை மற்றும் பீகாருக்கு ஹரியானாவுக்கு இடையேயான போட்டி உப்பு சப்பில்லாமல் முடிந்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா, மும்பை அணிக்காக ஆடினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்ததால், பீகார் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

பீகார் அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே சோபிக்கவில்லை. இருவரை தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கங்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இரு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னையே எட்டினர். இதனால் 28.2 ஓவருக்கு வெறும் 69 ரன்களுக்கே பீகார் அணி ஆல அவுட்டானது. மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

70 ரன்கள் என்ற எளிய இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக  ரோஹித் சர்மா மற்றும் அகில் ஹெர்வாத்கர் ஆகிய இருவரும் களமிறங்கினர். அகில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோஹித்தும் ஆதித்யா தரேவும் இணைந்து 10 ஓவர்களில் போட்டியை முடித்தனர். 

ரோஹித் சர்மா 33 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 
 

click me!