
கடந்த 2009-ல் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இன்று பாகிஸ்தான் - உலக லெவன் அணிகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 2009-ல் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு அங்கு எந்த அணியும் விளையாட முன்வரவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வே மட்டும் அங்கு சென்று விளையாடிய நிலையில் கடந்த ஜூனில் நடைபெற்ற மினி உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கண்டது.
அதன் முன்னோட்டமாக இப்போது பாகிஸ்தான் - உலக லெவன் அணிகள் மோதும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. முதல் போட்டி இன்றும், 2-வது போட்டி நாளையும், 3-வது போட்டி வெள்ளிக்கிழமையும் நடைபெறுகின்றன.
பாகிஸ்தான் அணி சர்ப்ராஸ் அஹமது தலைமையில் களமிறங்குகிறது.
உலக லெவன் அணிக்கு தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கியிருக்கும் விடுதியைச் சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் விவரம்:
சர்ப்ராஸ் அஹமது (கேப்டன்), ஃபகார் ஜமான், அஹமது ஷெஸாத், பாபர் ஆஸம், ஷோயிப் மாலிக், உமர் அமின், இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஆமிர் யாமின், முகமது ஆமிர், ருமான் ரயீஸ், உஸ்மான் கான், சோஹைல் கான்.
உலக லெவன் அணியின் விவரம்:
டூபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, சாமுவேல் பத்ரீ, ஜார்ஜ் பெய்லி, பால் காலிங்வுட், பென் கட்டிங், கிரான்ட் எல்லியட், தமிம் இக்பால், டேவிட் மில்லர், மோர்ன் மோர்கல், டிம் பெய்ன், திசாரா பெரேரா, இம்ரான் தாஹிர், டேரன் சமி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.