தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்.. உலக கோப்பை அணியில் யாருக்கு இடம்? மௌனம் கலைத்த தேர்வுக்குழு தலைவர்

By karthikeyan VFirst Published Feb 18, 2019, 4:59 PM IST
Highlights

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களில் ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டும், இந்த தொடரில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 
 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ரிசர்வ் தொடக்க வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையே இருந்தது. அதிலும் ரிசர்வ் தொடக்க வீரர் தான் கேஎல் ராகுல் தான் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் எடுத்து உறுதி செய்துவிட்டது. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களில் ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டும், இந்த தொடரில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் ஆஸ்திரேலிய தொடர் என்பதால், இந்த தொடருக்கான அணி கிட்டத்தட்ட உலக கோப்பைக்கான அணியாகவே பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கையில், தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டது அவரது மிகப்பெரிய ஏமாற்றம்தான். கேஎல் ராகுல், விஜய் சங்கர், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய தொடரில் புறக்கணிக்கப்பட்டதால் உலக கோப்பையில் அவர் ஆடுவதற்கான வாய்ப்பில்லை என்பதும் அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதுமே பல முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. 

எனினும் ராகுல், ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் தான் மாற்று தொடக்க வீரருக்கான சரியான தேர்வு என்பதால், அவரை உலக கோப்பை அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யாருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரசாத், தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவருமே சிறப்பாக ஆடியுள்ளனர். தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் வேலையை சிறப்பாக செய்தார். அதேநேரத்தில் ரிஷப் பண்ட் முன்பைவிட தற்போது பேட்டிங்கில் முதிர்ச்சியடைந்திருக்கிறார். அவரும் நன்றாக ஆடுகிறார். இது ஒரு ஆரோக்கியமான போட்டி. இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு எடுத்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

click me!