ஐபிஎல்லில் மிரட்ட காத்திருக்கும் தோனி!! ரசிகர்கள் உற்சாகம்

By karthikeyan VFirst Published Feb 18, 2019, 3:52 PM IST
Highlights

3 முறை கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இந்த முறையும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. 

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்த 11 சீசன்களில் 2016, 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் சிஎஸ்கே அணி ஆடவில்லை. அதுவரை நடந்த 8 சீசன்களில் 2 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே, 2018ல் மீண்டும் களம்கண்டபோதும் கோப்பையை வென்று அசத்தியது. 

3 முறை கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இந்த முறையும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. சிஎஸ்கே அணியின் நிரந்தர கேப்டனாக திகழும் தோனி, அணியை சிறப்பாக வழிநடத்தி சென்று வெற்றிகளை குவித்து கொடுப்பதோடு, கடந்த சீசனில் பேட்டிங்கிலும் மிரட்டினார். 

இந்நிலையில் வரும் ஐபிஎல் சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் சிஎஸ்கே அணி உள்ளதோடு, தோனிக்கு பல சாதனைகளும் காத்திருக்கின்றன. 

1. ஐபிஎல்லில் தோனி 186 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த சீசனில் இன்னும் 14 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல்லில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டும் முதல் இந்திய வீரராவார். ஆனால் ரெய்னா 185 சிக்ஸர்களுடனும் ரோஹித் சர்மா 184 சிக்ஸர்களுடனும் உள்ளனர். எனவே இவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் மூவரில் யார் முதலில் இந்த மைல்கல்லை எட்டப்போகிறார்கள் என்று பார்ப்போம். ஒருவேளை முதலாவது இந்திய வீரராக இல்லையென்றாலும் வரும் சீசனில் தோனி 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார் என்பது உறுதி. கிறிஸ் கெய்ல் 292 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

2. ஐபிஎல்லில் விக்கெட் கீப்பராக தோனி, 116 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்துள்ளார். தினேஷ் கார்த்திக் 124 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்து முதலிடத்தில் உள்ளார். இதில் இருவருக்கும் இடையே இந்த சீசனில் கடும் போட்டியிருக்கும். 

3. இதுவரை 159 ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள தோனி, 94 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் 6 வெற்றிகளை பெற்றால், ஐபிஎல்லில் 100 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார். 
 

click me!