
பாராலிம்பிக்-ல் தங்கப்பதக்கம் வெல்ல காரணம் எனது தாயார் மற்றும் பயிற்சியாளர் மட்டுமே காரணம் என்று தங்கமகன் மாரியப்பன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இதனை அடுத்து மாரியப்பனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடி பரிசு தொகை அறிவித்தது. மத்திய அரசு, மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு தொகை அறிவித்தது.
இது மட்டும் அல்லாமல் தங்கமகன் மாரியப்பனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பரிசு தொகைகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் கிரிக்கெட் சச்சின் தெண்டுல்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டும், ரூ.15 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.
இதேபோல் சென்னை, மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், விளையாட்டு துறையில்
சர்வதேசம், தேசம் மற்றும் மாநில, மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி வாகை சூடிய மாணவர்களைப் பாராட்டும் விதமாக பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் அவரது பயிற்சியாளர் சத்தியநாராயணா பங்கு பெற்ற சாதனையாளர்களின் சாதனைப் பெறுவிழா பள்ளி இன்று நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தங்கமகன் மாரியப்பன் மற்றும் அவரது பயிற்சியாளர் சத்தியநாராயணா கலந்து கொண்டனர். அப்போது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் மாரியப்பன் வழங்கினார். பின்னர், மாணவர்களிடையே பேசிய மாரியப்பன், எனது வெற்றிக்கு தாயாரும், பயிற்சியாளரும்தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.