
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 2-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 107-ஆம் நிலை வீரரான யூகி பாம்ப்ரி, பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் உலகின் 75-ஆம் நிலையில் இருக்கும் போஸ்னிய வீரர் மிர்ஸா பேசிச்சுடன் மோதினார்.
இதில், 7-5, 6-3 என்ற செட் கணக்கில் மிர்ஸா பேசிச்சை வீழ்த்தினார் பாம்ப்ரி. ஒரு மணி 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில், 13 பிரேக் பாய்ண்ட் வாய்ப்புகளில், யூகி 5-ஐ கைப்பற்ற, பேசிச் இரண்டை எட்டினார்.
இத்துடன் 2-வது முறையாக பேசிச்சை சந்தித்துள்ளார் யூகி. அதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சந்திப்பில் சோஃபியா டென்னிஸ் போட்டியில் பேசிச்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் யூகி.
பாம்ப்ரி தனது 2-வது சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் சாக்கை சந்திக்கிறார்.
போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஜேக் சாக்குடன், யூகி பாம்ப்ரி மோதுவது இது முதல் முறையாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.