
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் யூகி பாம்ப்ரி, போஸ்னியா வீரரான மிர்ஸா பேசிச்சை சந்திக்கிறார்.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் யூகி பாம்ப்ரி தனது 2-வது தகுதிச்சுற்றில் ஸ்வீடனின் எலிஸ் ஒய்மேயருடன் மோதி 7-5, 6-2 என்ற செட்கணக்கில் வென்றார்.
யூகி - எலிஸ் மோதியது இது 2-வது முறையாகும். முன்னதாக, அப்டோஸ் டென்னிஸ் போட்டியில் 2015-இல் இருவரும் மோதிய ஆட்டத்தில் எலிஸ் ஒய்மேயர் வென்றிருந்தார்.
தற்போது பிரதான சுற்றுக்கு முன்னேறிய பாம்ப்ரி அதில் போஸ்னியாவைச் சேர்ந்த உலகின் 75-ஆம் நிலை வீரரான மிர்ஸா பேசிச்சை சந்திக்கிறார்.
மிர்ஸா பேசிச்சை யூகி எதிர்கொள்வது இது 2-வது முறை. கடந்த 2016 சோஃபியா டென்னிஸ் போட்டியில் இருவரும் மோதியபோது யூகியை வீழ்த்தியிருந்தார் மிர்ஸா.
யூகி இந்த முதல் சுற்றில் வெல்லும் பட்சத்தில், தனது 2-வது பிரதான சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் சாக்கை எதிர்கொள்வார்.
அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - பிரான்ஸின் எட்வர்ட் வாசெலின் இணை தங்கள் முதல் சுற்றில், பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோ - ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஜோடியுடன் மோதுகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.