வெறித்தனமா அடிக்கும்போது இதெல்லாம் சர்வ சாதாரணம்!! ஸ்பைடர் கேமராவை பதம் பார்த்த மேக்ஸ்வெல்.. வீடியோ

By karthikeyan VFirst Published Nov 22, 2018, 10:19 AM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடித்த பந்து, போட்டியை படம்பிடித்துக் கொண்டிருந்த ஸ்பைடர் கேமராவை பதம்பார்த்தது. 
 

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடித்த பந்து, போட்டியை படம்பிடித்துக் கொண்டிருந்த ஸ்பைடர் கேமராவை பதம்பார்த்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் இன்னின்ஸில் 16.1 ஓவரின் போது மழை குறுக்கிட்டது. அப்போதைக்கு அந்த அணி 153 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு எஞ்சிய 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ஓவர் முடிவில் அந்த அணி 158 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து டக்வொர்த் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தவான் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இலக்கை விரட்ட முயன்றார். எனினும் இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ் மிக முக்கிய காரணம். அதிரடியாக ஆடி ரன்களை குவித்துக்கொண்டிருந்த கிறிஸ் லின், 37 ரன்களில் வெளியேற, அதன்பின்னர் அந்த பணியை மேக்ஸ்வெல் செவ்வனே செய்தார். குருணல் பாண்டியா வீசிய 14 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார் மேக்ஸ்வெல். 

அதன்பிறகு மீண்டும் 16வது ஓவரை குருணல் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு சிக்ஸர் விளாச, பின்னர் அந்த ஓவரின் 5வது பந்தில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தையும் மேக்ஸ்வெல் சிக்ஸருக்கு அனுப்புவதற்காக தூக்கி அடிக்க, எதிர்பாராத விதமாக பந்து, போட்டியை அந்தரத்தில் தொங்கியபடி படம்பிடித்துக்கொண்டிருந்த ஸ்பைடர் கேமராவில் பட்டு கீழே விழுந்தது. அதனால் அந்த பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

"It's hit the Fox!"

Just wait for the camera shot at the end! pic.twitter.com/yoouEWxc9u

— cricket.com.au (@cricketcomau)
click me!