ரோஹித்துக்கு ரொம்ப ஸ்பெஷலான போட்டி இது!! ஏன் தெரியுமா..?

By karthikeyan VFirst Published Sep 18, 2018, 7:12 PM IST
Highlights

ஹாங்காங்கிற்கு எதிராக ஆடிவரும் போட்டி ரோஹித் சர்மாவிற்கு ஸ்பெஷலான போட்டி. ஆனால் ரோஹித் சர்மா இந்த ஸ்பெஷலான போட்டியில் ஸ்பெஷலாக எதுவுமே செய்யாமல் அவசரப்பட்டு அவுட்டாகிவிட்டார்.
 

ஹாங்காங்கிற்கு எதிராக ஆடிவரும் போட்டி ரோஹித் சர்மாவிற்கு ஸ்பெஷலான போட்டி. ஆனால் ரோஹித் சர்மா இந்த ஸ்பெஷலான போட்டியில் ஸ்பெஷலாக எதுவுமே செய்யாமல் அவசரப்பட்டு அவுட்டாகிவிட்டார்.

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை எளிதாக கிடைத்ததல்ல. இன்று கேப்டனாகும் அளவிற்கு வளர்ந்துள்ள ரோஹித்தின் வளர்ச்சி எளிதாக அடையப்பட்டதல்ல. அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் ரோஹித் தவித்த கால மெல்லாம் உண்டு. பின்னர் தனது திறமையை நிரூபித்து அணியில் நிரந்தர இடம்பிடித்தார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ம் ஆண்டு அவர் அடித்த இரட்டை சதம், பின்னர் 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அடித்த 264 ஆகியவைதான் அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடத்தை பெற்றுக்கொடுத்தது. இந்த இரண்டு பெரிய இன்னிங்ஸ்களையும், அவர் தொடக்க வீரராக களமிறங்கிய பிறகுதான் அடித்தார். 

ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் ஆடிவந்த ரோஹித், தொடக்க வீரராக களமிறங்கிய பிறகுதான் தனது திறமையை நிரூபித்து, இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கமுடிந்தது. அந்த வகையில், இன்று ஹாங்காங்கிற்கு எதிரான போட்டி, அவர் தொடக்க வீரராக களமிறங்கிய 100வது போட்டி.

இந்த ஸ்பெஷலான போட்டியில் முதலில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்ததும் பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம்போலவே அவசரப்பட்டு 23 ரன்களில் அவுட்டானார்.

 

click me!