
ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
விம்பிள்டன் போட்டியில் களமிறங்க காத்திருந்த ஷரபோவாவுக்கு காயம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மரியா ஷரபோவா வெளியிட்டுள்ள அறிக்கை:
"ரோம் மாஸ்டர்ஸ் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குறித்து மேலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசை நார் முறிவு முழுமையாகக் குணமடையாதது தெரியவந்தது. அதனால் துரதிருஷ்டவசமாக விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. ஜூலை 31-ல் நடைபெறவுள்ள ஸ்டான்போர்டு போட்டியில் களமிறங்குவேன்' என தெரிவித்துள்ளார்.
ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் 15 மாத தடைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச டென்னிஸ்க்கு திரும்பிய ஷரபோவாவுக்கு விம்பிள்டன் போட்டி ஏற்பாட்டாளர்கள் வைல்ட்கார்டு கொடுக்கவில்லை. அதனால் அதில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.