
அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் பெனால்டி வாய்ப்பால் வெற்றிப் பெற்ற மலேசிய அணி, இந்தியாவின் இறுதிச்சுற்று கனவை பொசுக்கியது
அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மலேசியாவும் எதிர்கொண்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பின்னர், நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் மலேசியா கோலடித்தது. அந்த கோல்தான் அதற்கு வெற்றிக் கோலாக அமையும் என்று அப்போது யாரும் கணித்திருக்க மாட்டார்கள்.
கடைசி நேரத்தில் பெனால்டியால் வெற்றியைப் பெற்ற மலேசிய அணி, இந்தியாவின் இறுதிச்சுற்று கனவை பொசுக்கியது.
இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், பிரிட்டனும் மோதுகின்றன.
இதில் வெற்றிப் பெற்றால் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் 10-ஆவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் ஆஸ்திரேலியா.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதுகின்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.