லிவர்பூல் அணிக்கு தோல்வியை பரிசளித்தது ரியல் மாட்ரிட்... 13-வது முறையாக கோப்பையை வென்று அசத்தல்...

 
Published : May 28, 2018, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
லிவர்பூல் அணிக்கு தோல்வியை பரிசளித்தது ரியல் மாட்ரிட்... 13-வது முறையாக கோப்பையை வென்று அசத்தல்...

சுருக்கம்

Liverpool defeat by Real Madrid and won trophy for 13th time ...

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி 13-வது முறையாக கோப்பையை வென்றது.
 
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் முதல் டிவிஷன் கிளப் அணிகளுக்கு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு நாக் ஔட் அடிப்படையில் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிக்கு சாம்பியன்ஸ் லீக் என பெயரிடப்பட்டுள்ளது.

2017-18-ஆம் ஆண்டுக்கான இறுதி ஆட்டம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணியும், இங்கிலாந்தின் லிவர்பூல் அணிகளும் மோதின.

நடப்புச் சாம்பியன் ரியல் மாட்ரிட் 16-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே லிவர்பூல் தாக்குதல் பாணியை கடைபிடித்தது. எனினும் ரியல் அணி மெதுவாக ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 

முதல் பாதி கோலின்றி முடிந்த நிலையில் இரண்டாம் பாதியில் 51-வது நிமிடத்தில் ரியலின் கரிம் பென்செமா முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து 55-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் சாடியோ மானே கோலடித்தார். 1-1 என்ற சமநிலை ஏற்பட்ட போது, ரியல் அணியின் காரெத் பாலே 64 மற்றும் 83-வது நிமிடங்களில் அடித்த கோல்கள் வெற்றியை உறுதி செய்தது.

அதன்படி, யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வென்று 13-வது முறையாக கோப்பையை வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!