வெஸ்ட் இண்டீஸின் விராட் கோலி இவர்தான்.. பிரயன் லாராவே புகழும் அந்த வீரர் யார்..?

By karthikeyan VFirst Published Oct 30, 2018, 5:54 PM IST
Highlights

இந்திய அணிக்காக விராட் கோலி என்ன செய்கிறாரோ அதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்றாம் வரிசை வீரர் ஷாய் ஹோப்பால் செய்ய முடியும் என முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா நம்புகிறார். 
 

இந்திய அணிக்காக விராட் கோலி என்ன செய்கிறாரோ அதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்றாம் வரிசை வீரர் ஷாய் ஹோப்பால் செய்ய முடியும் என முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா நம்புகிறார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 

இந்த தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் நல்ல நெருக்கடி கொடுத்து ஆடிவருகிறது. முதல் மற்றும் நான்காவது போட்டியில் மட்டும்தான் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் கடுமையாக போராடி டிரா செய்தது. மூன்றாவது போட்டியில் அந்த அணி அபார வெற்றி பெற்றது. இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. 

அந்த அணியில் கெய்ல், பொல்லார்டு, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல் போன்ற சீனியர் வீரர்கள் இல்லையென்றாலும் ஷாய் ஹோப், ஹெட்மயர் ஆகிய வீரர்கள் அருமையாக ஆடிவருகின்றனர். ஹெட்மயர் அடித்து ஆடி ஆதிக்கம் செலுத்துகிறார். அதேநேரத்தில் ஷாய் ஹோப் சூழலுக்கு ஏற்றவாறு அருமையாக ஆடுகிறார். ஹோப் அந்த அணியின் ஹோப்பாக(நம்பிக்கையாக) இருக்கிறார். 

இந்தியாவுக்கு எதிராக ஒரு சதமடித்த ஹோப், மற்றொரு போட்டியில் 90 ரன்களை கடந்து சதத்தை தவறவிட்டார். அவரது ஆட்டம் அபாரமாக உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஹோப் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா, இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. எனினும் ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றிருக்கிறது. ஒரு அணியாக வெஸ்ட் இண்டீஸ் இன்னும் நிறைய விஷயங்களை வளர்த்துக்கொண்ட வேண்டியிருக்கிறது. ஷாய் ஹோப் அருமையான வீரர். அவர் ஆடவந்ததிலிருந்து அவரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சிறப்பாக ஆடுகிறார். இந்திய அணிக்காக மூன்றாம் வரிசையில் கோலி என்ன செய்கிறாரோ அதை ஹோப்பால் சிறப்பாக செய்ய முடியும். அதற்கு அவர் வேறு எதுவும் செய்ய வேண்டாம். கோலி எப்போது எப்படி ஆடுகிறார் என்பதை உற்றுநோக்கி அவரிடமிருந்தே ஹோப் கற்றுக்கொண்டு, அதை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக செய்யலாம் என லாரா தெரிவித்துள்ளார். 
 

click me!