இப்போ தெரியுதா கும்ப்ளேனா யாருனு..? மூக்குடைபட்ட ரிக்கி பாண்டிங்

By karthikeyan VFirst Published Jan 8, 2019, 10:45 AM IST
Highlights

அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி பெர்த்தில் நடந்த இரண்டாவது போட்டியில் தோற்றது. சிட்னியில் நடந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டிரா ஆனது.
 

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி பெர்த்தில் நடந்த இரண்டாவது போட்டியில் தோற்றது. சிட்னியில் நடந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டிரா ஆனது.

அதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இதுதான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வது முதன்முறை. தொடர்ந்து வெளிநாடுகளில் தோற்றுக்கொண்டே இருந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இது புதிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. 

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கும்ப்ளே, லட்சுமணன், ரிக்கி பாண்டிங் போன்ற பல முன்னாள் ஜாம்பவான்கள் தொடரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். ஒவ்வொரு முக்கியமான கிரிக்கெட் தொடருக்கு முன்பும், முன்னாள் ஜாம்பவான்கள் அந்த தொடரின் முடிவு குறித்து தங்களுடைய கணிப்பை தெரிவிப்பது இயல்புதான். அப்படித்தான் கும்ப்ளே, லட்சுமணன், ரிக்கி பாண்டிங் ஆகியோர் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர். 

இவர்களில் கும்ப்ளேவின் கணிப்பு தான் உண்மையாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரை 2-1 என இந்திய அணி வெல்லும் என்றும் மழையின் குறுக்கீடு இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கும்ப்ளே தெரிவித்திருந்தார். அது அப்படியே நடந்திருக்கிறது. மழையின் குறுக்கீட்டால் சிட்னி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்திய அணி 2-1 என தொடரை வென்றது. 

3-1 என இந்திய அணி தொடரை வெல்லும் என லட்சுமணன் தெரிவித்திருந்தார். சிட்னி டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிடவில்லை என்றால், லட்சுமணன் சொன்னதுதான் நடந்திருக்கும். 

ஆனால் கும்ப்ளே சொன்னதற்கு தலைகீழான கருத்தை தெரிவித்த பாண்டிங், மூக்குடைபட்டுள்ளார். 2-1 என ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் என பாண்டிங் கணித்திருந்தார். கும்ப்ளேவின் கணிப்பிற்கு நேர்மாறான கணிப்பை பாண்டிங் செய்திருந்தார். ஆனால் தொடரை இழந்து ஆஸ்திரேலிய அணி மண்ணை கவ்வியது. 
 

click me!