சச்சினுக்கு மட்டும்தான் இடம்!! இலங்கை அம்பயர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 12, 2018, 5:22 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தங்களது கனவு அணியை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய நடுவருமான குமார் தர்மசேனா தனது கனவு அணியை அறிவித்துள்ளார். 
 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தங்களது கனவு அணியை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய நடுவருமான குமார் தர்மசேனா தனது கனவு அணியை அறிவித்துள்ளார். 

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் தர்மசேனா, 1993ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இலங்கை அணியில் ஆடினார். 1996ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை அணியில் குமார் தர்மசேனா ஆடியுள்ளார்.

தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுவருகிறார். இந்தியா இங்கிலாந்து இடையேயான தொடரில் குமார் தர்மசேனா நடுவராக செயல்பட்டார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுவருகிறார். 

இந்நிலையில், தனது கனவு டெஸ்ட் அணியை குமார் தர்மசேனா தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹைடன் மற்றும் இலங்கை அணியின் சானத் ஜெயசூரியா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

மிடில் ஆர்டரில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா மற்றும் குமார் சங்ககரா ஆகியோரையும் ஆல்ரவுண்டராக ஜாக் காலிஸையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பவுலர்களாக இரு ஜாம்பவான்களான முரளிதரன் மற்றும் வார்னே ஆகிய இருவரையும் வேகப்பந்து வீச்சாளர்களாக மெக்ராத் மற்றும் வாசிம் அக்ரமையும் தேர்வு செய்துள்ளார். 

குமார் தர்மசேனா தேர்வு செய்துள்ள அணி:

மேத்யூ ஹைடன்(ஆஸ்திரேலியா), சானத் ஜெயசூரியா(இலங்கை), ரிக்கி பாண்டிங்(ஆஸ்திரேலியா), சச்சின் டெண்டுல்கர்(இந்தியா), பிரயன் லாரா(வெஸ்ட் இண்டீஸ்), குமார் சங்ககரா(இலங்கை), ஜாக் காலிஸ்(தென்னாப்பிரிக்கா), வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்), ஷேன் வார்னே(ஆஸ்திரேலியா), முத்தையா முரளிதரன்(இலங்கை), கிளென் மெக்ராத்(ஆஸ்திரேலியா)
 

click me!