முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா…

 
Published : Dec 14, 2016, 11:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா…

சுருக்கம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் (ஐஎஸ்எல்) இந்த சீசனில், அட்லெடிகோ டி கொல்கத்தா முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக, மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியின் 2-ஆவது சுற்றில் மும்பை சிட்டி-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் இறுதி வரையில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. எனினும், முதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இதனிடையே, தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியின் 2-ஆவது சுற்றில் டெல்லி டெனமோஸ்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை சந்திக்கும்.

இன்றைய ஆட்டமான, 2-ஆவது அறையிறுதி டெல்லி-கேரளா இடையே டெல்லியில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!