833 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார் கோலி…

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
833 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார் கோலி…

சுருக்கம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 833 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருந்தார் கோலி. அந்தத் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அதில் 405 ரன்கள் குவித்ததன் மூலம் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளார் கோலி.

தற்போதைய நிலையில் டி20 தரவரிசையில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2-ஆவது இடத்திலும், டெஸ்ட் தரவரிசையில் 3-ஆவது இடத்திலும் இருக்கிறார் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பதன் மூலம் டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடிக்க கோலி முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 8-ஆவது இடத்தில் உள்ளார். மற்றபடி இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் 891 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 7-ஆவது இடத்தில் உள்ளார். இலங்கையின் ரங்கனா ஹெராத் 867 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் 844 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் 493 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 2008-இல் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் ஓய்வு பெற்ற பிறகு 493 ரேட்டிங் புள்ளிகளை எட்டிய முதல் ஆல்ரவுண்டர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 3-ஆவது இடத்திலும் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 4-ஆவது இடத்தில் உள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்