டெல்லியை தோற்கடித்தது நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி…

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
டெல்லியை தோற்கடித்தது நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி…

சுருக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் 5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள நார்த் ஈஸ்ட் அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

குவாஹாட்டியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிப்பதில் தீவிரம் காட்ட, விறுவிறுப்பு ஏற்பட்டது.

60-ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தது. டிடியர் கோல் கம்பத்தை நோக்கி தூக்கியடித்த பந்தை கைப்பற்றிய சைதன்யா, டெல்லி பின்கள வீரர்கள் மற்றும் கோல் கீப்பரை வீழ்த்தி இந்த கோலை அடித்தார்.

இதன்பிறகு உத்வேகம் பெற்ற நார்த் ஈஸ்ட் அணி 70-ஆவது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது.
ராபர்ட் கொடுத்த பாஸை பெனால்டி பாக்ஸுக்கு வெளியில் வைத்து வாங்கிய ரொமாரிச், மிக வேகமாக முன்னேறிச் சென்று 10 "யார்ட்' தூரத்தில் இருந்து கோலடித்தார்.

கடைசி 10 நிமிடங்கள் கோலடிப்பதில் தீவிரம் காட்டிய டெல்லி அணி, கோல் கம்பத்தை நோக்கி 6 ஷாட்களை அடித்தது. ஆனால் ஒன்றுகூட கோலாகவில்லை. அதேநேரத்தில் நார்த் ஈஸ்ட் அணியும் தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டது.

கடுமையாகப் போராடிய டெல்லி அணிக்கு "இஞ்சுரி' நேரத்தில் மார்செலோ மூலம் ஒரு கோல் கிடைத்தது. எனினும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்