பாண்டியா வந்துட்டா ஜடேஜாவின் நிலை..? உலக கோப்பையில் பாண்டியாவா ஜடேஜாவா? மௌனம் கலைத்த கோலி

By karthikeyan VFirst Published Nov 2, 2018, 3:45 PM IST
Highlights

ஆசிய கோப்பைக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் மிரட்டினார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஏதாவது ஒரு வகையில் அபாரமான பங்களிப்பை அளிக்கக்கூடிய வீரர்கள் பாண்டியாவும் ஜடேஜாவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 
 

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியதால் கிடைத்த வாய்ப்பை ஜடேஜா அருமையாக பயன்படுத்தி கொண்டார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பெற்று மீண்டும் அணிக்கு திரும்பினால், ஜடேஜாவின் நிலை என்ன? என்பதும் இருவரில் எந்த ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு என்பதும் பெரும் சந்தேகமாக உள்ளது. 

இந்திய அணியின் வேகப்பந்து ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் காயத்தால் பாதியில் வெளியேறினார். இதையடுத்து இந்திய ஒருநாள் அணியில் ஓராண்டுக்கு பிறகு வாய்ப்பை பெற்ற ஜடேஜா, அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அணிக்கு நல்ல பங்களிப்பை வழங்கினார். 

ஆசிய கோப்பைக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் மிரட்டினார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஏதாவது ஒரு வகையில் அபாரமான பங்களிப்பை அளிக்கக்கூடிய வீரர்கள் பாண்டியாவும் ஜடேஜாவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இந்நிலையில், பாண்டியா மீண்டும் வந்துவிட்டால் இருவரில் யார் உலக கோப்பை அணியில் தேர்வாவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு தீவிரமாக உள்ளது. இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களுடன் உலக கோப்பைக்கு செல்ல வேண்டும்.

பாண்டியா, ஜடேஜா இருவருமே நல்ல ஆல்ரவுண்டர்கள். ஜடேஜா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடி உலக கோப்பையில் தன் பெயரை நிராகரிக்க முடியாதபடி செய்துவிட்டார். 

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால் உலக கோப்பையில் ஜடேஜாவின் வாய்ப்பு குறித்து கேள்விக்கு பதிலளித்த கோலி, பாண்டியா வேகப்பந்து ஆல்ரவுண்டர், ஜடேஜா ஸ்பின் ஆல்ரவுண்டர். எனவே அணிக்கு எந்த மாதிரியான காம்பினேஷன் தேவைப்படுகிறதோ அதற்கேற்றபடி இருவரில் ஒருவரை தேர்வு செய்வோம் என கோலி தெரிவித்துள்ளார். 

click me!