
இந்திய கேப்டன் விராட் கோலியை வீழ்த்த திட்டம் வகுத்துள்ளதாகவும், அதனை நன்றாக செயல்படுத்த பயிற்சி எடுத்து வருவதாகவும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டக்கில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்திய அணியின் முதுகெலும்பாகத் திகழும் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதில் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் திட்டமாக இருக்கிறது.
இதற்கேற்றாற்போல், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால், பிபிசி வானொலி 5-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“எங்களைப் பொருத்த வரை, விராட் கோலியை நிலைத்த ஆட அனுமதிக்க மாட்டோம். விராட் கோலி ஒரு வியத்தகு வீரர். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அவரது அபாரத் திறமையை நாங்கள் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம். எனவே, கோலிக்காக நாங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளோம். இத்திட்டத்தை நன்றாக செயல்படுத்த பயிற்சி எடுத்து வருகிறோம்” என்றார் அவர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.