யுவராஜ் சிங்கால் இனி பிரயோஜனமில்லை.. கேப்டனையே விரட்டியடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்!!

By karthikeyan VFirst Published Nov 16, 2018, 11:28 AM IST
Highlights

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி யுவராஜ் சிங் உட்பட சில முக்கிய வீரர்களை அணியிலிருந்து விடுவித்துள்ளது. 
 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி யுவராஜ் சிங் உட்பட சில முக்கிய வீரர்களை அணியிலிருந்து விடுவித்துள்ளது. 

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் கோவாவில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்பாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. 

மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை பார்த்தோம். இப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களை விடுவிப்பதற்கு முன்னதாகவே அதன் பயிற்சியாளராக இருந்த வீரேந்திர சேவாக்கை விடுவித்தது. அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2011 உலக கோப்பை நாயகனும் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்த யுவராஜ் சிங்கை விடுவித்துள்ளது. யுவராஜ் சிங் கடந்த சீசனில் சரியக ஆடவில்லை. 8 போட்டிகளில் ஆடி 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். சர்வதேச போட்டிகளிலும் அவர் ஆடாததால் இடைவெளிவிட்டு ஐபிஎல்லில் மட்டும் ஆடுவது என்பது சவாலான விஷயம்தான். எனவே அவரால் வருகிற ஐபிஎல்லிலும் சோபிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதனடிப்படையில்தான் பஞ்சாப் அணி அவரை விடுவித்துள்ளது. 

அதேபோல அதிரடி பேட்ஸ்மேனும் ஆஸ்திரேலிய கேப்டனுமான ஆரோன் ஃபின்ச்சையும் இந்திய ஸ்பின்னர் அக்ஸர் படேல், அதிரடி பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி ஆகியோரையும் பஞ்சாப் அணி அதிரடியாக விடுவித்துள்ளது. மனோஜ் திவாரியும் கடந்த சீசனில் சோபிக்க தவறிவிட்டார். 

அதேநேரத்தில் ராகுல், முஜிபுர் ரஹ்மான், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை, டேவிட் மில்லர், கேப்டன் அஷ்வின் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தக்கவைத்த வீரர்கள்:

ரவிச்சந்திரன் அஷ்வின்(கேப்டன்), கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல், மயன்க் அகர்வால், அங்கிட் ராஜ்பூத், கருண் நாயர், முஜீபுர் ரஹ்மான், டேவிட் மில்லர், ஆண்ட்ரூ டை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்த வீரர்கள்:

யுவராஜ் சிங், ஆரோன் ஃபின்ச், அக்ஸர் படேல், மனோஜ் திவாரி, மோஹித் சர்மா, பரீந்தர் ஸ்ரான், அக்‌ஷ்தீப் நாத், பர்தீப் சாஹு, மயன்க் தாகர், மன்சூர் தர், பென் டுவார்ஷுயிஸ். 

மாற்றப்பட்ட வீரர்:

மந்தீப் சிங்குக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ்.
 

click me!